வியாழன், 11 ஏப்ரல், 2013

தோல்

தோல்
வியர்வை நாற்றம் அகல சைவ உணவுக்கு மறுங்கள் யோகா செய்யுங்கள்
தியானம் செய்து அமைதியாயிருங்கள் 2 வேலை குளியுங்கள்

ஆவாரம்பூ கஷாயம் பருகுங்கள்
எலுமிச்சையை வெட்டி உடலில் தேய்த்து குளியுங்கள் ,சோப்பு பயன் படுத்தாதிர்கள் ,சிகைக்காய் பயன்படுத்துங்கள் 

மூக்கு ,பல்

மூக்கு

ஜலதோஷம் 

மிளகாய் சுட்டு புகையை முகருங்கள் 
மிளகு கஷாயம் வைத்து மெல்ல மெல்ல சுவைத்து பருகுங்கள் 

இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு . மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும்.காலை மற்று இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்க வேண்டும்.உறக்கம் வந்தால் உறங்கிவிடுங்கள் பகலில் கூட .

பல் 

எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை வைத்துவிட்டு, 18 மிளகு- ஐ நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கண்ணத்தின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும். 

FOOD

உணவுக் கட்டளைகள் நான்கு

  • எல்லாவற்றிலும் இருந்து கொஞ்சம் சாப்பிடுங்கள். ஒரே உணவுப் பொருளை அதிகமாகச் சாப்பிடாதீர்கள்.
  • நீங்கள் சாப்பிட்டே தீர வேண்டும் என்னும் உணவுப் பொருள் எதுவும் கிடையாது. ஏதாவது ஒன்று உங்களுக்குப் பிடிக்காவிட்டால் அதே அளவு சத்துள்ல இன்னொரு உணவைச் சாப்பிடலாம்.
  • சில உணவுகள் மற்ற உணவுகளைக் காட்டிலும் உங்களுக்கு நல்லதாக இருக்கும். நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு ஏற்ற மதிப்பு (சத்து) இல்லாத உணவுகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
  • தாகம் இல்லாவிட்டாலும், தினமும் 6 முதல் 8 டம்ளர் திரவ உணவை எடுத்துக்கொள்ள முயற்சியுங்கள்.
  • http://www.oldagesolutions.org/Health/FootCare_tamil.aspx
  • உணவு கோபுரம் 
1. தானிய உணவுகள்
2. காய்கறி உணவுகள்
3. பழ உணவுகள்
4. பால் உணவுகள்
5. இறைச்சி உணவுகள்
6. இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகள்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

கண்பாதுகாப்பு - 4

கண்பாதுகாப்பு - 4
முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்; கண் பார்வை குறைபாடு நீங்கும்.
கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும். முருங்கை பூவை பாலில் வேகவைத்து - பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.
வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.
முதுமைக் காலத்தில் கண்டிப்பாக தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும். விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும்
குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும.

மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது. இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது. ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம். நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து , மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கவும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உச்சி வெயிலில் அலையக் கூடாது.
முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை வெள்ளெழுத்து என்று அழைக்கின்றனர். இது குணமாக:
முருங்கை விதை - 100 கிராம்
மிளகு - 100 கிராம்

இரண்டையும் நன்றாக கலுவத்திலிட்டு மெழுகு போல் அரைத்து ஒரு வெங்கலத்தாம்பளத்தினுள் தடவி வெய்யிலில் வைத்தால் தாம்பளம்
சூடேறி எண்ணெய்கசியும். அதனை வடிகட்டி பத்திரப்படுத்தவும்.
இந்த எண்ணெயில் 1 சொட்டு எண்ணெய் கண்ணில் விட வெள்ளெழுத்து பாதிப்பு குணமாகும்.
பொதுவாக கண்களில் வரும் நோய்களில், வயதானவர்களுக்கு காணப்படுவது கண்புரை. இதை ஆங்கிலத்தில், “காட்டிராக்ட்என்பர். கண்களில் உள்ள லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது. பிறந்தது முதல், கண் லென்ஸ் ஒளிக்கதிர்களை விழித்திரைக்கு அனுப்பி, கண் பார்வை தருகிறது. கண்புரை ஏற்பட்டபின் இது மாறுபடுவதால், பார்வை குறைவு ஏற்படுகிறது. கண் புரை நோய், 40 வயது முதல் துவங்கலாம். முதலில், தூரப்பார்வை குன்றுதல், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் மற்றும் பார்வை தன்மை குறைபாடு ஆகியவை உண்டாகும். கண்ணாடி நம்பர் அடிக்கடி மாறக்கூடும். இவ்வாறு ஏதேனும் பிரச்னை இருந்தால், கண் மருத்துவரிடம், கண் புரை நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண் புரையை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.

சனி, 6 ஏப்ரல், 2013

சுண்டைக்காய்

சுண்டைக்காய் 
மருத்துவப் பயன்கள் :- சுண்டை கோழையகற்றியாகவும், வயிற்றுப்பூச்சிக் கொல்லியாகவும், சுண்டைக் கசாயம் பாம்புக்கடி வீரியம் குறைக்கவும், நீரிழிவு நோய், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு முதலியன குணமாக்கக் கூடியது. மலேசியாவில் இதன் விதையை பல் வலி குறையப் பயன்படுத்துகிறார்கள். வியட்னாமில் இதன் இலையை மாதவிடாய் தொல்லைக்கும், தோல் வியாதியைப் போக்கவும் பயன்படுத்துகிறார்கள். இதன் பழம் சாப்பிட்டால் வயிற்றுவலி போகும்.


பால் சுண்டைக் காயைச்சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி முதலியன தீரும்.


உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து, பின் காயவைத்து எண்ணெயில் வறுத்து இரவு உணவில் பயன் படுத்தி வர மார்ச்சளி, ஆஸ்துமா, காச நோய் தீரும். வயிற்றுப் போக்கு நின்று விடும்.


சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேம்பு, சீரகம் ஆகியவை தனித்தனியே எடுத்து இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து இடித்த சூரணம் காலை, மாலை 2 சிட்டிகை ஒரு டம்ளர் மோரில் சாப்பிட்டு வர பேதி, மூலம், பசியின்மை, மார்ச்சளி, நீரிழுவு தீரும்.


சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் இளவறுப்பாய் வறுத்து உப்பு சேர்த்து சூரணித்து உணவில் கலந்து சாப்பிடப் பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் ஆகியவை தீரும்.


இதன் வேர்ப்பட்டையை பொடிசெயுது தேய்காய் தொட்டியில் வைத்து ஒரு சிட்டிகை மூக்கிலிட்டு உள் இழுக்க தலைநோய், நீரேற்றம், மண்டைக் குடச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர் பாய்தல் நிற்கும்.


சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பைப் பிண்ணாக்கு சம அளவு எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழப்பு நோய் தணியும்.


சுண்டை வேர் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாச்சல் குணமாகும்.


இதன் வத்தலை காயவைத்து அதனுடன் புளித்த மோர் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து உணவுடன் உண்ண நீரிழிவு நோய் குறையும்.



கண்பாது காப்பு 3

http://www.panippulam.com/index.php?option=com_content&view=article&id=7270:2012-10-07-01-13-23&catid=55:diet-fitness&Itemid=412
கண்பாது காப்பு 3 ,மூக்கிளிடும் மருந்தும் 

கண்நோய் யொடு தலை நோய் கண் புகையில்”:

கண்பார்வை மங்கலாக இருத்தல் இன்நிலையில் கண்களில் புரை வளரத் தொடங்குவதை கட்டுகின்றது இதனால் கண்பார்வை மங்கலாகிக் குறைந்து வரும் இது இரத்தழுத்தத்தால் ஏற்படலாம். தலைவலியும் ஏற்படும் இதனைப் போக்குகின்ற திறன் அறுகம் புல் எண்ணைக்கு உண்டு.

நசியம் என்பது மூக்கிற்கு மருந்திடுவதாகும்.இரு மாதங்களுக்கு ஒரு முறை இட வேண்டுமென சித்தர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் வள்ளலார் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது இட வேண்டும் எனக் கூறுகிறார்.
இவ்வாறு முறையாக நசியம் செய்து வந்தால் தலைக்கனம், தலைவலி, கழுத்து வலி, நரம்பு வலி, வாய்க் கோணுதல் போன்ற வாதம்(முக வாதம்), பக்க வாதம், காக்காய் வலிப்புப் போன்ற கடுமையான நோய்கள் நம்மை அணுகா, வேலைப் பழுவினாலும் வரும் கோபம், பரபரப்பு, போன்ற உணர்வுகளாலும் தலைவலியில் மன இறுக்கம் (STRESS) உண்டாகிறது.


இதனால் பலவித பிணிகள் உண்டாகின்றன.பிணிகளில் 70% மன இறுக்கத்தினால் உண்டாகின்றது. இரத்த அழுத்தம், இருதய நோய் சம்பந்தமான வியாதிகளும் மன இறுக்கத்தினால்தான் உண்டாகின்றன.மன இறுக்கம் தலைப்பாகத்தில் உண்டாக்கும் வெப்பத்தினால்(காப்பி, டீ, குளிர் பானங்கள் குடிப்பதனாலும்,வெந்நீரில் குளிப்பதனாலும்,இதே விளைவுகள் உண்டாகின்றன.)

நசியம் மருந்து தயாரிக்கும் முறைகள்:-


 1)மாசிக்காயை நெய்யில் வறுக்கவும்,வெடிக்கும் தறுவாயில் எடுத்து ஆறவிட்டு நன்றாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 2)மகிழம்பூக்களை மணல்,கல்,தூசி நீக்கி நீரில் கழுவி உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
 3)அ.தும்பை வேர்,ஆ)சுண்டை வேர்,இ) நெருப்பில் வாட்டிய இலுப்பைப் புண்ணாக்கு ஆகிய இம்மூன்றையும் சமன் எடை எடுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
 மேற்கண்ட மூன்றும் மூன்று விதமான நசியப் பொடி தயாரிக்கும் முறைகள்.இவை மூன்றுக்குமே ஒரே விதமான பலனைக் கொடுக்கும் தன்மை உண்டு.

நசியம் செய்யும் முறை:- 
 மூக்கின் ஒரு துவாரத்தை அடைத்துக் கொண்டு ஒரு சிட்டிகை பொடியை(இது இரு விரல்களால் எடுக்கும் அளவு) மறு துவாரத்தில் வைத்து மூச்சோடு இழுக்கவும். இவ்வாறு மறு நாசித் துவாரத்திலும் செய்யவும்.இப்படிச் செய்வதால், நரம்பு மண்டலம், சிரசு (தலை), இவைகளில் சேர்ந்துள்ள துர் நீர் அனைத்தும், வழலை என்ற சளியும் தும்மல் மூலம் மூக்கின் வழியாக வெளியேறிவிடும்.தும்மல் முதல் முறை ஒரு மணி நேரம் நீடிக்கும்.அடுத்தடுத்த முறைகளில் இது குறைவாக இருக்கும்.


ரு மாதங்களுக்கு ஒரு முறை நசியம் இட வேண்டுமென சித்தர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் வள்ளலார் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது இட வேண்டும் எனக் கூறுகிறார்.


 . கண்களில் இருந்து நீர் வடியும் சமயத்தில் கண்களை பாதுகாக்க ஆள்காட்டி விரலில் உள்ள 3வது கோட்டிற்கு நேராக கட்ட விரலை வைத்து மசாஜ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் கண்களுக்கு ஆபத்து இல்லை.


கண்பாது காப்பு - 2


கண்பாது காப்பு - 2
* எனக்கு வயது 40. கடந்த ஆறு, ஏழு மாதங்களாக எனது இடது கண் துடிக்கிறது. கண் துடிக்கும்போது முகமும் உதடு வரை துடிக்கிறது. டென்ஷன் அதிகமானால் துடிப்பு கூடுகிறது. இது எதனால்? ஆயுர்வேதத்தில் சிகிச்சை உள்ளதா?
ராஜி சண்முகம், கோவை.
‘உதாவர்த்தம்' என்ற பெயரில் ஓர் உபாதை இருக்கிறது. தலையைச் சார்ந்த சில இயற்கை உபாதைகளான கொட்டாவி, கண்ணீர், தும்மல், ஏப்பம், வாந்தி போன்றவற்றை தடுத்து நிறுத்த முயற்சிப்பதால், மூளையிலிருந்து கீழ்நோக்கி இறங்கும் நரம்புகளில் ஏற்படும் தாக்கம், நீங்கள் குறிப்பிடும் துடிப்பு உபாதைக்குக் காரணமாகலாம். மூளைப் பகுதிக்கு வறட்சி ஏற்படாத வகையில் தர்ப்பகம் எனும் ஒரு கபம் செயல்படுகிறது. இந்த கபத்தினுடைய நெய்ப்பினால் நரம்புகளில் குடி கொண்டுள்ள வாயுவின் வறட்சியான குணம் வளர்ந்துவிடாமல் எந்நேரமும் நெய்ப்பை அவற்றின் மீது படரச் செய்து ஒரு கவசம் போன்ற பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.  மேற்கூறிய காரணங்களாலும், உணவில் அதிக காரம், கசப்பு, துவர்ப்புச் சுவையைக் சேர்ப்பதாலும், அதிக அளவில் மிளகு, மிளகாய், அத்திப் பிஞ்சு, சுண்டை வற்றல், பாகற்காய் போன்றவற்றைச் சாப்பிடுவதாலும் ஏற்படும் உடல் உட்புற வறட்சியானது, இந்த மூளை நரம்புகளின் மேலுள்ள நெய்ப்பு எனும் கவசத்தை வறட்சி எனும் குணாதிக்யத்தால் கழட்டிவிடுகிறது. மிருதுவான மூளை நரம்புகள் வறட்சியின் தன்மையால் தன்னிச்சையாகத் துடிக்கின்றன. மேற்குறிப்பிட்ட காரணங்களால் உங்களுக்கு மூளை நரம்புகளுக்கு வலுவூட்டும் நெய்ப்பு சிகிச்சைதான் மிகவும் தேவை என்பதை உணரலாம்.
 மூக்கு துவாரம்தான் தலைக்குச் செல்லும் வழி. அங்கு செலுத்தப்படும் மருந்து தலையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள சிருங்காடகம் என்னும் இடத்தை அடைந்து அங்கு பரவி, தலை, கண்கள், காதுகள், தொண்டை போன்ற இடங்களில் உள்ள நரம்புகளில் நுழைந்து, கழுத்துக்கு மேல் உள்ள உறுப்புகளில் தோன்றிய எல்லா வகை நோய்க் கூட்டங்களையும் அங்கிருந்து விரைவில் வெளிப்படுத்திவிடுகின்றன.   
 க்ஷீரபலா 101, தான்வந்திரம் 101, அணு தைலம், கார்ப்பாஸாஸ்த்யாதி தைலம், பலா தைலம் என்றெல்லாம் பல ஆயுர்வேத மூலிகை மருந்துகளைக் கொண்டு மூக்கினுள் செலுத்திக் குணப்படுத்தலாம். இவற்றில்  எது உகந்த மருந்தோ அதைச் சரியான அளவில் ஓர் ஆயுர்வேத மருத்துவரை அணுகி நீங்கள் தெரிந்து கொண்ட பிறகு உபயோகிப்பதே சிறந்தது.
 தலையில் எண்ணெய் தேக்கி வைக்கும் முறையான சிரோவஸ்தி எனும் சிகிச்சை முறையும் தங்களுக்கு நல்ல பலனைத் தரும். க்ஷீரபலா தைலம் இந்த உபாதைக்குச் சிறந்தது. இளஞ்சூடாகத் தலையில் ஊற்றி, காது, வாய், மூக்கு இவற்றின் வழியாக வெளிவரும் வரையிலும், வேதனை குறையும் வரையிலும் தலையில் தாங்கிக் கொண்டிருக்க வேண்டிய இந்த சிகிச்சை முறையும் நல்லதே. ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி இந்த சிகிச்சையைச் செய்து கொள்ள வேண்டும்.
 கர்ணபூரணம் எனும் காதுகளில் வெதுவெதுப்பாக ஊற்றி நிரப்பும் எண்ணெய் சிகிச்சைமுறையும், கண்களில் மூலிகை நெய்யிட்டு நிரப்பும் சிகிச்சையும், வாயினுள் எண்ணெய் விட்டுக் கொப்பளிக்கும் கபள - கண்டூஷ சிகிச்சையும் நல்ல பலனைத் தரக் கூடியவை.
 தசமூல ரஸாயனம் எனும் லேகிய மருந்தை சுமார் 10 கிராம் இரவு படுக்கும் முன் நக்கிச் சாப்பிடவும். உணவில் பொதுவாக இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையுள்ளவை ஏற்றவை. பால், நெய், தயிர், வெண்ணெய், இனிப்பு மாதுளை, வாழைப் பழம், மாம்பழம், திராட்சை, அரிசி, கோதுமை, உளுந்து இவை உணவுக்கு ஏற்றவை. அதிக உடற்பயிற்சியும், இரவில் கண் விழித்தலையும் தவிர்க்கவும்.
நன்றி 
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771