சனி, 6 ஏப்ரல், 2013

கண்பாது காப்பு 3

http://www.panippulam.com/index.php?option=com_content&view=article&id=7270:2012-10-07-01-13-23&catid=55:diet-fitness&Itemid=412
கண்பாது காப்பு 3 ,மூக்கிளிடும் மருந்தும் 

கண்நோய் யொடு தலை நோய் கண் புகையில்”:

கண்பார்வை மங்கலாக இருத்தல் இன்நிலையில் கண்களில் புரை வளரத் தொடங்குவதை கட்டுகின்றது இதனால் கண்பார்வை மங்கலாகிக் குறைந்து வரும் இது இரத்தழுத்தத்தால் ஏற்படலாம். தலைவலியும் ஏற்படும் இதனைப் போக்குகின்ற திறன் அறுகம் புல் எண்ணைக்கு உண்டு.

நசியம் என்பது மூக்கிற்கு மருந்திடுவதாகும்.இரு மாதங்களுக்கு ஒரு முறை இட வேண்டுமென சித்தர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் வள்ளலார் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது இட வேண்டும் எனக் கூறுகிறார்.
இவ்வாறு முறையாக நசியம் செய்து வந்தால் தலைக்கனம், தலைவலி, கழுத்து வலி, நரம்பு வலி, வாய்க் கோணுதல் போன்ற வாதம்(முக வாதம்), பக்க வாதம், காக்காய் வலிப்புப் போன்ற கடுமையான நோய்கள் நம்மை அணுகா, வேலைப் பழுவினாலும் வரும் கோபம், பரபரப்பு, போன்ற உணர்வுகளாலும் தலைவலியில் மன இறுக்கம் (STRESS) உண்டாகிறது.


இதனால் பலவித பிணிகள் உண்டாகின்றன.பிணிகளில் 70% மன இறுக்கத்தினால் உண்டாகின்றது. இரத்த அழுத்தம், இருதய நோய் சம்பந்தமான வியாதிகளும் மன இறுக்கத்தினால்தான் உண்டாகின்றன.மன இறுக்கம் தலைப்பாகத்தில் உண்டாக்கும் வெப்பத்தினால்(காப்பி, டீ, குளிர் பானங்கள் குடிப்பதனாலும்,வெந்நீரில் குளிப்பதனாலும்,இதே விளைவுகள் உண்டாகின்றன.)

நசியம் மருந்து தயாரிக்கும் முறைகள்:-


 1)மாசிக்காயை நெய்யில் வறுக்கவும்,வெடிக்கும் தறுவாயில் எடுத்து ஆறவிட்டு நன்றாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 2)மகிழம்பூக்களை மணல்,கல்,தூசி நீக்கி நீரில் கழுவி உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
 3)அ.தும்பை வேர்,ஆ)சுண்டை வேர்,இ) நெருப்பில் வாட்டிய இலுப்பைப் புண்ணாக்கு ஆகிய இம்மூன்றையும் சமன் எடை எடுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
 மேற்கண்ட மூன்றும் மூன்று விதமான நசியப் பொடி தயாரிக்கும் முறைகள்.இவை மூன்றுக்குமே ஒரே விதமான பலனைக் கொடுக்கும் தன்மை உண்டு.

நசியம் செய்யும் முறை:- 
 மூக்கின் ஒரு துவாரத்தை அடைத்துக் கொண்டு ஒரு சிட்டிகை பொடியை(இது இரு விரல்களால் எடுக்கும் அளவு) மறு துவாரத்தில் வைத்து மூச்சோடு இழுக்கவும். இவ்வாறு மறு நாசித் துவாரத்திலும் செய்யவும்.இப்படிச் செய்வதால், நரம்பு மண்டலம், சிரசு (தலை), இவைகளில் சேர்ந்துள்ள துர் நீர் அனைத்தும், வழலை என்ற சளியும் தும்மல் மூலம் மூக்கின் வழியாக வெளியேறிவிடும்.தும்மல் முதல் முறை ஒரு மணி நேரம் நீடிக்கும்.அடுத்தடுத்த முறைகளில் இது குறைவாக இருக்கும்.


ரு மாதங்களுக்கு ஒரு முறை நசியம் இட வேண்டுமென சித்தர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் வள்ளலார் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது இட வேண்டும் எனக் கூறுகிறார்.


 . கண்களில் இருந்து நீர் வடியும் சமயத்தில் கண்களை பாதுகாக்க ஆள்காட்டி விரலில் உள்ள 3வது கோட்டிற்கு நேராக கட்ட விரலை வைத்து மசாஜ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் கண்களுக்கு ஆபத்து இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக