வியாழன், 11 ஏப்ரல், 2013

கடுக்காய் வாய்ப்புண்ணுக்கு நல்லது.வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் இருக்காது.உடல் உள்ளையும் சரி வெளியையும் சரி மஞ்சள் பயன் படுத்தினால் கிருகிகளே அண்டாது.

தினசரி  ஒரு  கைப்பிடியளவுக்கு  பாதாம் பருப்பு,  வேர்க்கடலை  போன்ற  கொட்டை   வகைகளைச்  சாப்பிடுங்கள்.  இதை  சாப்பிட்டால்  இதய நோய்  அபாயம்  வெகுவாக  குறையும்.   ஆயுளில்  3   ஆண்டுகளை  அதிகரிக்கும்  என்கிறார்கள்  அமெரிக்க  ஆராய்ச்சியாளர்கள்,  இதயத்துக்கு  ஆரோக்கியமளிக்கும்   நல்ல  கொழுப்பு,  ஒட்டுமொத்த   நலனை  காக்கும்  'செலினியம்'  ஆகியவை  கொட்டை வகை  உணவுகளின்  சொத்து.

வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர் குடித்தால் சிறுநீரகக்கோளாறு, உடல் சூடு, கல்லீரலில் உள்ள தீயவைகள் போன்றவைகளை நீக்குகிறது.சாப்பாடுகளுக்கு இடையே  3   மணிநேர  இடைவெளி  அவசியம்.  மூன்று  பிரதான  உணவுகளில்  காலை  உணவை  முழுமையாக  சாப்பிடுங்கள்.

வயதுக்கு  வந்தவர்கள்  தினமும்  6   கிராமுக்கு  மேல்  உப்பு  சேர்க்க  வேண்டாம்.  சமையல்  செய்யும்போது  மட்டும்  உப்பு  சேர்க்கவேண்டும்.  பிரெட்,  பாக்கிங்  உணவு  வகைகளில்  அதிக  உப்பு  மறைந்திருக்கிறது என்பதை உணருங்கள்.

தினமும்  8  கப்  திரவம்  குடிப்பது   அவசியம்.  ஆனால் அது  எல்லாம்   தண்ணீராக  இருக்க  வேண்டும்  என்ற  அவசியமில்லை.   ,
சாதரணமாக  குளிபானங்களில் 10  சதவீத  சர்க்கரை  உள்ளது.  அதாவது  ஒரு   புட்டியில்  150  கலோரி  இருக்கிறது.  தொடர்ந்து   குளிர்பானம்  பருகுவது   தொப்பைக்கு  ஒரு  முக்கிய  காரணம். 'டயட் '   குளிர்பானங்களுக்கு  மாறலாம்.  ஜூஸுடன்  அதிக தண்ணீர்  சேர்த்துப்   பருகலாம்.

அதிகப்  பசியின்  போது  நீங்கள்  அதிகமாக   சாப்பிடுவீர்கள்.

நீங்கள்  ஒருமுறை  உணவை  விழுங்கும்போது  15  முறை  மெல்ல  வேண்டும். நாம்  சராசரியாக  7   முறைதான் உணவை  மேல்கிறோம்.
உங்கள்  தினசரி  உணவில்,  கொழுப்பு  20  கிராம்களுக்கு  அதிகமாக இருக்கக்கூடாது.  உங்கள்  தினசரி  கலோரிகளில்   35   சதவீதத்துக்குள்   தான்  கொழுப்பின்   பங்கு  இருக்க  வேண்டும்.

கடுக்காய் வாய்ப்புண்ணுக்கு நல்லது.வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் இருக்காது.உடல் உள்ளையும் சரி வெளியையும் சரி மஞ்சள் பயன் படுத்தினால் கிருகிகளே அண்டாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக